×

தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேச பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு வைகாசி பெருவிழா, குருபூஜை பெருவிழா, பட்டின பிரவேச பல்லக்கு நிகழ்ச்சி 11 நாட்கள் நடைபெறும். அதன்படி, இந்தாண்டு வரும் 22ம் தேதி பட்டின பிரவேச பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறும் என்று தருமபுரம் ஆதீனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. பின்னர் தடையை நீக்கி ஆர்டிஓ உத்தரவிட்டார்.

 இதைத்தொடர்ந்து ஞானபுரீஸ்வரர் கோயிலில் பட்டின பிரவேச பெருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் ரிஷப கொடி ஏற்றப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்வாக 18ம் தேதி திருக்கல்யாண வைபவம், 20ம் தேதி தேரோட்டம், 21ம் தேதி காவிரியில் தீர்த்தவாரி நடக்கிறது. வரும் 22ம் தேதி தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி, சிவிகை பல்லக்கில் பட்டின பிரவேசம் மேற்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்.

Tags : Dharmapuram Aadeenam Pattina Entrance Ceremony , Dharmapuram Aadeenam Pattina Entrance Ceremony begins with flag hoisting
× RELATED சென்னை கோயம்பேடு சந்தையில் 4 டன்...