பாகிஸ்தான் பெண் ஏஜென்டிடம் மயங்கி ராணுவ ரகசியங்களை விற்ற அதிகாரி டிஸ்மிஸ்

புதுடெல்லி: இந்தியாவை சேர்ந்த ராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள், முக்கிய ரகசியங்களை கையாள்பவர்களை, அவர்களின் பலவீனத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ வலையில் சிக்க வைத்து ரகசியங்களை பெற்று வருகிறது. இதற்கு பணம், அழகிய பெண்களை பகடைக்காயாக பயன்படுத்துகிறது. இது போன்ற பலவீனத்தில் சிக்கி, நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை விற்ற பல ராணுவ அதிகாரிகள் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், டெல்லி சுப்ரதோ பார்க் பகுதியில் உள்ள இந்திய விமானப் படையின் ஆவணக் காப்பு அலுவலகத்தில் அதிகாரியாக இருப்பவர் தேவேந்தர் நாராயண் சர்மா. இவர் இந்திய விமானப்படையின் ரகசியங்கள், அதிகாரிகள் குறித்த தகவல்களை பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவு ஏஜென்டிடம் பகிர்ந்து கொண்டதாக புகார் எழுந்தது. இது குறித்து அவரிடம் உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில், பாகிஸ்தான் பெண் ஏஜென்டிக்கு வாட்ஸ் அப் மூலம் ரகசியங்களை பகிர்ந்து கொண்டது உறுதியானது. மேலும், அவர் அனுப்பிய ரகசிய தகவல்களுக்கு கமிஷனாக பாகிஸ்தான் ஏஜென்டிடம் இருந்து பணம் பெற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து எலக்ட்ரானிக்ஸ் கருவிகள், பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை டிஸ்மிஸ் செய்தனர்.

Related Stories: