×

சாமி சிலைகள் இருப்பதாக சர்ச்சை தாஜ்மகாலில் சோதனையிடக் கூடாது: அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு

லக்னோ: முகலாய அரசர் ஷாஜஹான் தனது மனைவி நுார்ஜஹான் நினைவாக  கட்டியது தாஜ்மகால். ஆக்ராவில் அமைந்துள்ள இதைக் கட்ட அங்கிருந்த தேஜோலாயா எனும் சிவன் கோயில் இடிக்கப்பட்டதாக பாஜ பிரச்னையை எழுப்பி வருகிறது. இக்கோயிலில் இருந்த சிலைகள், தாஜ்மகாலில் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளில் இருப்பதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இதை திறந்து பார்க்க உத்தரவிடக் கோரி, பாஜ செய்தி தொடர்பாளர் ரஜ்னீஷ் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த தகவலை கேட்க நீங்கள் யார்? உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இது போன்ற விவாதங்கள் வரவேற்பு அறைகளில்தான் நடக்க வேண்டுமே தவிர நீதிமன்றத்தில் அல்ல. எனவே, அறைகளை திறந்து சோதனையிட உத்தரவிட முடியாது,’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Tags : Sami ,Taj Mahal ,Allahabad High Court , Controversial presence of Sami idols should not be tested in Taj Mahal: Allahabad High Court orders
× RELATED உ.பி. அரசின் மதரஸா சட்டம் செல்லாது: ஐகோர்ட் தீர்ப்பு