தேசிய மகளிர் ஹாக்கி: தமிழ்நாடு கோல் மழை

போபால்: தேசிய சீனியர் மகளிர் ஹாக்கிப் போட்டியில் கோல் மழை பொழிந்த  தமிழ்நாடு வீராங்கனைகள் 12-0 என்ற கோல் கணக்கில் அருணாச்சல பிரதேசத்தை வீழ்த்தினர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 12வது தேசிய சீனியர் மகளிர் ஹாக்கிப் போட்டி நடக்கிறது. அதில் எப் பிரிவில் இடம் பெற்ற தமிழ்நாடு-அருணாச்சல பிரதேச அணிகள் மோதின. தமிழ்நாடு வீராங்கனைகள் ஆரம்பம் முதலே அருணச்சல பிரதேச கோல் பகுதியை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். கூடவே அடுத்தடுத்து கோல் அடிக்க ஆரம்பித்தனர். முதல் கால்பகுதியில் 3, 2வது கால்பகுதியில் 4, 3வது கால் பகுதியில் 1, 4வது கால் பகுதியில் 4 என கோல் மழை பொழிந்தனர். அருணாச்சல பிரதேச வீராங்கனைகளால் கோல் அடிப்பதையும் தடுக்க முடியவில்லை. கோலும் அடிக்க முடியவில்லை. அதனால் ஆட்டத்தின் இறுதியில் தமிழ்நாடு 12-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிப் பெற்றது. தமிழக அணி வீராங்கனைகள் ரூபஸ்ரீ 3, சபரிமணி தேவி, நிவேதா, சோனியா, லிமா ரோஷினி ஆகியோர் தலா 2, மலர்விழி ஒரு கோல் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம்  தமிழ்நாடு லீக் சுற்றில் விளையாடிய 3 ஆட்டங்களில் 2ல் வெற்றிப் பெற்று எப் பிரிவில் 2வது இடத்தை பிடித்துள்ளது. லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிகின்றன.

Related Stories: