×

இலங்கையின் பிரதமராக 6வது முறையாக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்பு: மகிந்த ராஜபக்சே வாழ்த்து; ஜே.வி.பி எதிர்ப்பு

கொழும்பு: இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகிய நிலையில் ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதிவியேற்றர். நேற்று மாலை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ரணில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இன்று பதவியேற்றனர். ஏற்கனவே 5 முறை இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே  இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை சந்தித்து பொறுப்பை பெற்று கொண்டார். இலங்கையின் 26வது பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்க பெறுப்பேற்றார்.

 இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில்  கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்சே சகோதரர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு அடிபணிந்த  மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டக்கார்கள் மீது தாக்குதல் நடத்தியதில் இலங்கையில் கடும் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக உச்ச கட்ட பதற்றம் இலங்கையில் நிலவி வருகிறது.

மகிந்த ராஜபக்சே வாழ்த்து:
இலங்கை பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு  முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார் . நெருக்கடியான சூழலில் பொறுப்பேற்றுள்ளீர்கள் நாட்டை சிறப்பாக வழி நடத்த வாழ்த்துக்கள் என்று மகிந்த ராஜபக்சே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கேவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்தார்.

ஜே.வி.பி எதிர்ப்பு:
இலங்கை பிரதமராக பதவியேற்றுள்ள ரணிலுக்கு முதல் நாளிலேயே எதிர்ப்பு எழுத்துள்ளது. ராஜபக்சே குடும்பத்தை காப்பாற்றவே ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஜே.வி.பி  குற்றசாட்டு வைத்துள்ளார். ரணில்  தலைமையிலான அரசு ஒரு மதம் கூட நீடிக்காது என்று ஜே.வி.பி தெரிவித்துள்ளார்.

Tags : Ranil Wickremesinghe ,Sri Lanka ,Mahinda Rajapaksa ,JVP , Ranil Wickremesinghe becomes the Prime Minister of Sri Lanka
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்