இருதரப்பினர் மோதலால் பொட்டக்கொல்லை மாரியம்மன் கோயிலுக்கு பூட்டு: போலீஸ் குவிப்பு

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பொட்டக்கொல்லை தத்தனூரில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 16 நாள் திருவிழா நடந்து வருகிறது. இதில் ஒரு வகையறாக்களுக்கு 11 ஆண்டுகளாக சாமி கும்பிடுவதில் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் ஆர்டிஓ பரிமளம் தலைமையில் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது எந்த பிரச்னையும் இல்லாமல் சுமூகமாக சாமி கும்பிட அறிவுறுத்தினார்.

இந்நிலையில் தற்போது கோயில் திருவிழா நடந்து வரும் நிலையில் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் நேற்று இரவு கோயில் கதவை ஒரு தரப்பினர் பூட்டினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம், பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்ததும் ஆர்டிஓ பரிமளம் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்து பிரச்ைன தீரும் வரை கோயிலை பூட்டி வைக்க நேற்று உத்தரவிட்டார். அதன்படி நேற்று இரவு கோயில் கதவை தாசில்தார் ஸ்ரீதர் பூட்டினார். இதனால் கோயில் திருவிழா நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டது. அந்த பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: