×

கிராமத்தில் புகுந்து நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டும் கரடி: குன்னூர் அருகே மக்கள் பீதி

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளிலும் தேயிலை தோட்டங்களிலும் சர்வ சாதாரணமாக உலா வருகிறது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள ஜெகதளா கிராமத்தில் இரவு கரடி ஒன்று அங்கிருந்த வீட்டின் கதவை தட்டியது. அருகில் உள்ள தெருவிற்கு சென்று அங்கும் வீட்டின் கதவை தட்டியுள்ளது.

இந்த வீடியோ கிராமத்திலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது. கரடி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது. எனவே வனத்துறையின் கரடியை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Coonoor , In the village, at midnight, the door of the house, the bear
× RELATED குன்னூர் அருகே குடியிருப்பு...