வால்பாறையில் சிறுத்தை மர்மச்சாவு

வால்பாறை: கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ளது வரட்டுபாறை எஸ்டேட். இங்குள்ள டீக்கடை அருகில் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. இன்று காலை 6.30 மணி அளவில் டீக்குடிக்க சென்ற பொதுமக்களில் ஒருவர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பார்த்தனர்.

இதுகுறித்து உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களது உத்தரவின்பேரில் ஊழியர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கிராமத்தில் புகுந்து கோழிகளை வேட்டையாட வந்திருக்கலாம், அப்போது தவறிவிழுந்து தலையில் அடிபட்டு இறந்திருக்கலாம் என கூறப்படு

கிறது. சிறுத்தையின் மர்மச்சாவு குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: