கொடைக்கானலில் பிச்சிஸ் சீசன் ஆரம்பம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் விளையும் பழங்களில்  சிறப்பானது பிச்சிஸ் பழங்கள். இவை கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி,  பெருமாள்மலை, பேத்துப்பாறை, வடகவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில்  விளைவிக்கப்படுகிறது.மரங்களில் விளையக்கூடிய இந்த பிச்சிஸ் பழங்கள் மே  மாதத்தில் அறுவடை துவங்கும். அதன்படி தற்போது இந்த பழங்களின் அறுவடை  துவங்கியுள்ளது. பிச்சிஸ் பழம் ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையாவதால்  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு  பிச்சிஸ் பழங்கள் விளைச்சல் குறைவாக உள்ளதால் விவசாயிகள் முழுமையான  மகிழ்ச்சியை அடைய முடியவில்லை. இந்த பிச்சிஸ் பழ மகசூல் இம்மாதம் கடைசி வரை  இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: