கோவை: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கோவையில் இருக்கும் நிலையில் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரி முதல்வர்களுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தினார். பாராதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரி முதல்வர்கள், சிண்டிகேட் உறுப்பினர்கள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களையும் சந்தித்த நிலையில், தற்போது கல்லூரி முதல்வர்களுடனும் சந்திப்பு நடத்தி வருகிறார்.