கடலூர் அருகே பாதுகாப்பு கையுறைகள் இல்லாமல் கழிவுகளை சுத்தம் செய்யும் மாநகராட்சி ஊழியர்கள்

கடலூர்: கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் பாதுகாப்பு கருவிகள் எதுவும் இன்றி மாநகராட்சி ஊழியர்கள் அபாயகரமான முறையில் சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு நோய்கள் பரவகூடும் நிலையில் உள்ளது. பாதுகாப்பு அணிகலன் இன்றி ஆழமான சாக்கடை கால்வாயில் இறங்கி ஒப்பந்த ஊழியர்கள் கழிவுகளை அகற்றியது காண்போரை பதைபதைக்கச் செய்தது. குப்பை, மண் தேங்கிய சாக்கடை கால்வாய் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு, வார்டு வாரியாக சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.

சாக்கடையில் தேங்கியிருந்த மண், கழிவுகள் நேற்று அகற்றப்பட்டன.மண்வெட்டி, ஓரிரு சட்டிகளை மட்டுமே கொண்டு, துப்புரவு ஒப்பந்த ஊழியர்கள், பணிகளை மேற்கொண்டனர். கையுறை, கால்களுக்கு ஷூ, துர்நாற்றத்தை தவிர்க்க முக கவசம் என எந்தவொரு பாதுகாப்பு அணிகலன்களை அவர்கள் அணியவில்லை. கால்வாய் மீது பலர் தரைத்தளம் அமைத்துள்ளனர் தரைத்தளங்களுக்கு கீழ், கால்வாய்க்குள் வெறும் கால்களுடன் நடந்து சென்று, கழிவுகளை வெளியே கொண்டு வர ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டனர். எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், ஆழமான சாக்கடையில் இறங்கி, கழிவுகளை அவர்கள் சுத்தம் செய்தது, பார்ப்பவர் மனதை பதைபதைக்கச் செய்தது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் தலையிட வேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொண்டனர்

Related Stories: