போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு சார்பாக முதற்கட்டமாக 5% ஊதிய உயர்வு அளிக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு சார்பாக முதற்கட்டமாக 5 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், தொழிற்சங்கங்கள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகளை அரசு ஏற்றுள்ளது. 8 சதவீதம் ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள், அரசு 5 சதவீதம் அளிக்க முன்வந்துள்ளது. மேலும் சில கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Related Stories: