தமிழகத்தில் நாளை மறுநாள் அனைத்து கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை மறுநாள் அனைத்து கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டான்செட் தேர்வில் மாணவர்கள் பங்கேற்க வசதியாக கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உயர்க்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான டான்செட் தேர்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது.

அதில் மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே,அண்ணா பல்கலைக்கழகத்தின் https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற இணையதள பக்கத்தில் டான்செட் 2022 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: