ஹஜ் பயண காலியிடங்களை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் : ஹஜ் அசோசியேஷன் தலைவர் வலியுறுத்தல்

சென்னை: 2022ம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியை இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் புது டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது சென்னையில் இருந்து ஹஜ் செல்வதற்கு அடுத்த ஆண்டு முதல் விமானம் இயக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்ததற்கு அபுபக்கர் நன்றி தெரிவித்தார். விரைவில் அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர்,’இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்வோருக்கு வட மாநிலங்களில் காலியாக இருக்கக்கூடிய இடங்களை தமிழகம், கேரளாவுக்கு ஒதுக்கித் தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கூடுதலான பயணிகள் தமிழகம், கேரளாவில் இருந்து ஹஜ் செல்வதற்கு ஏதுவாக இருக்கும்’ என்றும் வலியுறுத்தினார். இது குறித்து பரிசீலித்து நல்ல பதில் அளிப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார். எனவே அடுத்த ஆண்டு முதல் வழக்கம் போல் சென்னையில் இருந்து ஹஜ் பயணம் செல்வதற்கான விமானங்கள் இயக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

Related Stories: