×

மே 14ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!

சென்னை: மே 14-ம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. நேற்று காலை ஆந்திர கடலோரப்பகுதியில் நிலவிய அசானி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து மசிலிப்பட்டனம் அருகே கரையைக் கடந்தாலும்,மசிலிப்பட்டணத்திற்கு மேற்கே தாழ்வு மண்டலமாக நிலவி வருகிறது.

மேலும் இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து அதே பகுதியில் நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக,தமிழகத்தில் வருகின்ற 14 ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே சமயம்,தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்கள் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வங்கக்கடல்,மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 60 கிமீ வரை காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai Meteorological Inspection Centre ,Nilgiri ,Govai ,Tiruppur , Heavy rains expected in 11 districts including Nilgiris, Coimbatore and Tiruppur on May 14: Chennai Meteorological Department.
× RELATED நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜ...