×

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 12 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை: கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: யாழ்ப்பாணம் சிறையிலுள்ள 12 ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மார்ச் 24-ம் தேதி 12 மீனவர்களும் கைதாகினர். 12 பேரும் ஜாமீனில் செல்ல விரும்பினால் ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என அண்மையில் நீதிபதி கூறியது சர்ச்சையானது.  தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி இலங்கை கடற்படையால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன்பின்னர் ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் மே 12-ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல வேண்டுமென்றால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் 12 மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மீனவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags : Rameswaram ,Kilinochchi court , 12 Rameswaram fishermen arrested for fishing across the border released from Jaffna jail: Kilinochchi court orders
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...