×

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குடியிருப்புகளுக்கு பரவிய காட்டுத்தீ: 20 வீடுகள் சேதம்

சேக்ரமென்டோ: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பணக்கார நகரமான லகுனாநீக்குவேல் பற்றி எரியும் காட்டுத்தீ குடியிருப்புகளுக்கும் பரவியதில் 20 வீடுகள் சேதமடைந்தன. தெற்கு கலிபோர்னியாவில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பற்றிய தீ, காட்டின் முகப்பில் இருந்த வீடுகளுக்கு பரவியுள்ளது. நேற்று பிற்பகலில் பலத்த காற்று வீசியதால் குடியிருப்புகளுக்கு தீ பரவியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பல மில்லியன் டாலர் மதிப்பிற்கு வீடுகள் தீபற்றி எரியும் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. இந்த தி விபத்தின் காரணாமாக குடியிருப்பு பகுதி மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயற்சித்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லகுனாநீக்குவேல் சுமார் 65,000 மக்கள் வசிக்கும் மலை உச்சி நகரமாகும். கடல் ஓரத்திலும் அமைந்துள்ளது. எனவே லாஸ் ஏஞ்சல்ஸுக்கு தெற்கே சுமார் 80 கி.மீ. தூரத்தில் உள்ள லகுனாநீக்குவேல் நகரம் சிறந்த சுற்றுலா தளமாகும். இதுவரை அங்கு வேறு எந்த பெரிய தீவிபத்துகளும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Tags : US ,California , USA, California, wildfires, damage to homes
× RELATED சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது