மணல் திட்டாக மாறிய சோலையார் அணை

வால்பாறை: வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக மே இறுதி வாரத்தில் துவங்கும் மழை தற்போது மே2ம் வாரம் தொடங்கி உள்ளது. வானம் தொடர்ந்து கரு மேகங்களுடன் காட்சி அளித்து வருகிறது. குளிர் காற்றும் வீசி வருகிறது. இந்நிலையில் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட அணைகளில் நீர் பிடிப்பில் முக்கியமான அணையாக கருதப்படும் சோலையார் அணை நீர் மட்டம் குறைந்து மண்திட்டாக காட்சி அளிக்கிறது.  மேலும் கீழ் நீரார், மேல்நீரார் அணைகளும் நீர் மட்டம் குறைந்து காணப்படுகிறது.  விரைவில் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று  சாரல் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்தது. தொடர்ந்து தென்மேற்கு பருவ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் தொடர்கிறது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கும் என வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்து உள்ளன. இந்நிலையில் வால்பாறையில் கேரளாவில் வானிலை நீடிக்கும் என்பதால், தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வறண்ட அணைகள் விரைவில் நிரம்பும் என பொதுப்பணித்துறையினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனா்.  மொத்தம் 165 அடி கொள்ளளவு கொண்ட சோலையார் அணையின் நீர் மட்டம் 26.6 அடி மட்டுமே உள்ளது. எனவே அணை பகுதி மண்திட்டாக காட்சி அளிக்கிறது.

Related Stories: