சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா

சிவகாசி: சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த மே 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.11 நாட்கள் நடக்கும் விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மே 8ம் தேதி நடந்த 5ம் நாள் திருவிழாவில் அரிசி கொட்டகை மண்டபத்தில் அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மே 9ம் தேதி 6ம் திருவிழாவில் நவரத்தின சிம்மாசனத்தில் அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அக்னிசட்டி, கயர் குத்து, முடிகாணிக்கை, முத்து காணிக்கை, மாவிளக்கு, தவழும் பிள்ளை காணிக்கை என நேர்த்திகடன் செலுத்தி பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.

அம்மனுக்கு பொங்கல் வைத்தும் சிறப்பு வழிபாடு செய்தனர். பொங்கலையொட்டி சிவகாசியில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. பட்டாசு, தீப்பெட்டி, அச்சு உள்ளிட்ட அனைத்து ஆலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. சிவகாசி, திருத்தங்கல் மட்டுமல்லாது சுற்றியுள்ள கிராமத்தினரும் கலந்து கொண்டனர். சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்து அன்னதானம் வழங்கினார்.

Related Stories: