'விவசாயத்தை பாதிக்கும் எந்த ஆலைக்கும் தமிழக அரசு அனுமதி அளிக்காது': பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அமைப்பின் கூட்டத்தில் முதல்வர் உறுதி..!!

சென்னை: விவசாயத்தை பாதிக்கும் எந்த ஆலைக்கும் தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டத்தில் முதல்வர் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், முன்னோர் காலத்தில் இருந்தே வரலாற்று சிறப்பு மிக்க பகுதியாக காவிரி டெல்டா விளங்கி வருகிறது. வேளாண் தொழிலாளர்களின் நலனுக்காக தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்று குறிப்பிட்டார்.

Related Stories: