செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய கோல்ப் வீராங்கனை தீக்சா தாகர்

பிரேசிலியா: செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியில்  இந்திய கோல்ப் வீராங்கனை தீக்சா தாகர் தங்கம் வென்றார். பிரேசிலில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான 24 வது டெப்லிம்பிக்ஸ் போட்டி நடைபெறுகிறது.

பெண்களுக்கான கோல்ப் போட்டியில் இந்தியா சார்பில் திக் ஷா தாகர், அரையிறுதியில் நார்வேயின் ஆன்ட்ரியா ஹோவ்ஸ்டெயினை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். பிரேசிலில் நடைபெற்ற இறுதி போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஆஸ்லின் கிரேஸை வீழ்த்தி தீக்சா தாகர் தங்கம் வென்றுள்ளார்.  

கடந்த 2017 டெப்லிம்பிக்சில் இந்திய கோல்ப் வீராங்கனை தீக்சா தாகர் வெள்ளி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: