பாகிஸ்தான் நாட்டிற்காக இந்தியாவில் உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் கைது.! டெல்லி காவல்துறை அதிரடி

டெல்லி: பாகிஸ்தான் நாட்டிற்காக இந்தியாவில் உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டிற்காக இந்தியாவில் உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் ஒருவரை டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இந்திய விமானப்படை வீரரின் பெயர் தேவேந்திர சர்மா என கூறப்படுகிறது.

இந்திய விமானப்படை வீரர் தேவேந்திர சர்மா,பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு இந்தியா விமானப்படை குறித்த சில தகவல்களை பரிமாறியதாக சந்தேகம் எழுந்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்திய விமானப்படை வீரரின் மனைவியின் வங்கிக்கணக்கில் சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்தனைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: