ஈரோட்டில் வணிகவரித்துறை அலுவலகத்தில் பெண் துணை கமிஷனர் மயங்கி விழுந்து பலி

ஈரோடு: ஈரோட்டில் வணிகவரித்துறை அலுவலகத்தில் பெண் துணை கமிஷனர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை மாவட்டம் புது விலாங்கூடி தென்றல் நகரை சேர்ந்த பாண்டியன் மனைவி மோகனசுந்தரி (57). இவர் ஈரோட்டில் தங்கி, ஈரோடு வணிக வரித்துறை அலுவலகத்தில் மாநில வரி துணை கமிஷனராக இருந்தார். நேற்று காலை வழக்கம்போல் மோகனசுந்தரி பணிக்கு வந்தார். அப்போது, அலுவலகத்தில் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த சக ஊழியர்கள், மோகனசுந்தரியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு  அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே  இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: