×

அனுமதியின்றி வெட்டியதாக மிரட்டி மர வியாபாரியிடம் ரூ.600 பறித்த எஸ்எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்: திருவண்ணாமலை எஸ்பி அதிரடி

தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை காவல் நிலையத்தின் சிறப்பு எஸ்ஐ சுரேஷ்(52). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது. இவரது நிலத்தின் பக்கத்து நிலத்துக்காரர், அவரது நிலத்தில் உள்ள வேப்பம், தைலம் மரங்களை கடந்த 9ம் தேதி ஆட்களை வைத்து வெட்டியுள்ளார். அப்போது, சுரேஷ் நிலத்தில் இருந்த ஒரு சிறிய மரத்தையும் வெட்டியதாக தெரிகிறது.

இந்த மரங்களை லோடு ஆட்டோவில் ஏற்றி விற்பனைக்காக வியாபாரி எடுத்து சென்றார். அப்போது, அங்கு வந்த சுரேஷ் லோடு ஆட்டோவை தடுத்து நிறுத்தி ‘‘மரங்களை அனுமதியின்றி வெட்டியுள்ளீர்கள். பணத்தை கொடுத்துவிட்டு மரத்தை எடுத்து செல்லுங்கள்’ எனக்கூறி மிரட்டியதாக தெரிகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த மர வியாபாரி, ‘‘என்னிடம் ₹600 தான் உள்ளது’’ எனக்கூறி அதை சுரேஷிடம் ெகாடுத்துள்ளார். சுரேஷ் பணத்தை வாங்கிக்கொண்டு மர வியாபாரி மற்றும் கூலி ஆட்களை அங்கிருந்து அனுப்பியுள்ளார். இதற்கிடையில் சுரேஷ் பணம் கேட்டு மிரட்டி, பணம் வாங்கியதை செல்ேபானில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ நேற்று முன்தினம் வைரலானது. இதையறிந்த திருவண்ணாமலை எஸ்பி பவன்குமார் இதுகுறித்து விசாரணை நடத்தினார். இதையடுத்து, சிறப்பு எஸ்ஐ சுரேஷை ஆயுதப்படைக்கு மாற்றி நேற்று அதிரடி உத்தரவிட்டார்.



Tags : SSI Armed Forces , Thiruvannamalai SP Action: SSI Armed Forces transferred Rs.
× RELATED விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்ய 5,000...