×

டெல்லி கேப்பிடல்சுக்கு எதிராக அஷ்வின் - படிக்கல் அதிரடி

மும்பை: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ஆர்.அஷ்வின் - தேவ்தத் படிக்கல் ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன் குவித்தது.
டி.ஒய்.பாட்டீல் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பன்ட் முதலில் பந்துவீச முடிவு செய்தார். யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் இருவரும் ராஜஸ்தான் இன்னிங்சை தொடங்கினர். பட்லர் 11 பந்தில் 7 ரன் மட்டுமே எடுத்து சகாரியா பந்துவீச்சில் ஷர்துல் வசம் பிடிபட்டார். அடுத்து ஜெய்ஸ்வாலுடன் ஆர்.அஷ்வின் இணைந்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 43 ரன் சேர்த்தது.

ஜெய்ஸ்வால் 19 ரன் எடுத்து மார்ஷ் பந்துவீச்சில் லலித் வசம் கேட்ச் கொடுத்து வெளியேற, அஷ்வின் - படிக்கல் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்தது. சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த அஷ்வின் 50 ரன்னில் (38 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்டன் சாம்சன் 6 ரன், பராக் 9 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

ஓரளவு தாக்குப்பிடித்த படிக்கல் 48 ரன் (30 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அன்ரிச் பந்துவீச்சில் மாற்று வீரர் நாகர்கோட்டியிடம் பிடிபட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன் குவித்தது. வாண்டெர் டுஸன் 12 ரன், டிரென்ட் போல்ட் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பந்துவீச்சில் சேத்தன் சகாரியா, அன்ரிச், மிட்செல் மார்ஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 20 ஓவரில் 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்கியது. ஸ்ரீகர் பாரத், டேவிட் வார்னர் இருவரும் துரத்தலை தொடங்கினர். போல்ட் வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே பாரத் டக் அவுட்டாகி வெளியேற, டெல்லிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

Tags : Ashwin ,Reading ,Delhi Capitals , Ashwin - Reading Action against Delhi Capitals
× RELATED கேப்பிடல்சின் துல்லிய தாக்குதலில்...