மாமல்லபுரம் புராதன சின்னங்கள் ஐஏஎஸ் குழுவினர் கண்டு ரசித்தனர்

மாமல்லபுரம்: நாட்டில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் 87 பேர், நேற்று மாமல்லபுரம் வந்தனர். அவர்களை, திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், சுற்றுலா துணை அலுவலர் கார்த்திக், வருவாய் ஆய்வாளர் ரகு, விஏஓ நரேஷ்குமார் ஆகியோர் வரவேற்று, கடற்கரை கோயிலை சுற்றி பார்க்க அழைத்து சென்றனர். ஐந்துரதம் உள்பட புராதன சின்னங்களை கண்டு ரசித்து, குழுவாக புகைப்படம் எடுத்து கொண்டனர்.

பின்னர், கடற்கரை கோயில் வளாகத்தின் முன் பகுதியில் மாமல்லபுரம் துறைமுக பட்டினமாக இருந்ததற்கு சான்றான படகு துறை, அகழி பகுதிகளையும் அவர்கள் பார்வையிட்டனர். கடல், உப்பு காற்று அரிக்காத வகையில் எப்படி கோயில் பழமை மாறாமல் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகிறது உள்பட பல்வேறு தகவல்கள், கோயிலை உருவாக்கிய மன்னர்களின் வரலாறுகள் குறித்து அவர்களுக்கு, சுற்றுலா வழிகாட்டிகள் விளக்கி கூறினர்.

Related Stories: