கற்பக விநாயகா கல்லூரியில் பெண்களை கவுரவிக்கும் “மாதரே டி 22’’ நிகழ்ச்சி

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பெண்களை கவுரவிக்கும் வகையில், ‘’மாதரே டி22’’ நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி இயக்குனர் மீனாட்சி அண்ணாமலை தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தீயணைப்புத் துறை இணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் பங்கேற்று உரையாற்றினார். கல்லூரி முதல்வர் காசிநாதன்பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார். பல்வேறு துறைகளைச் சார்ந்த மிஸ் கலா, ராஜலட்சுமி செந்தில் கணேஷ், சியாமளா ரமேஷ்பாபு, அனிதா, ஆர்த்தி சதீஷ், மார்க்சிய காந்தி, ராஜேஸ்வரி, நிவேதா முரளிதரன், மதி சிம்பு, மிருணாளினி, யாழினி தேவராஜன் ஆகியோரை கவுரவித்து விருதுகள் வழங்கப்பட்டன.

Related Stories: