மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம், தலைவர் படப்பை மனோகரன் தலைமையில் நடந்தது. மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடந்தது. ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் நித்யா சுகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு (பொறுப்பு) செயலாளர் மல்லிகா வரவேற்றார்.

கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலுக்கு ஒதுக்கப்படும் நிதியை, மக்களின் தேவைகளை உணர்ந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும், வாரத்துக்கு 2 தங்களது பகுதிக்கு சென்று, மக்களை நேரில் சந்தித்து, குறைகளை கேட்டறிய வேண்டும். நிதிகளை முறையாக கையாள வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட கவுன்சிலர்கள் ராஜலட்சுமி குஜராத், பத்மா பாபு, சிவராமன், ஹரி, பொற்கொடி செல்வராஜ், சிவசங்கர், அமுதா செல்வம், ராமூர்த்தி, பாலா, வனிதா மகேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: