சேர்த்து வைப்பதாக கூறி நம்பரை வாங்கினார் நண்பரின் கள்ளக்காதலியுடன் தொடர்ந்து செல்போன் பேச்சு: டிரைவருக்கு வெட்டு; வாலிபர் கைது

அண்ணாநகர்: நெற்குன்றம் 14வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(50), ராமு (எ) ராமச்சந்திரன்(34). இந்நிலையில், ராமச்சந்திரனுக்கு அதே அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த 35 வயது பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அவர் திருமணம் ஆனவர். சமீபகாலமாக அவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக அந்த பெண், ராமச்சந்திரனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதுகுறித்து கேட்டறிந்த சுப்பிரமணியன், கள்ளக்காதலியுடன் சேர்த்து வைப்பதாக ராமச்சந்திரனிடம் கூறி அந்த பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கினார். பின்னர் அவர் அந்த பெண்ணுடன் தொடர்ந்து தினமும் செல்போனில் பேசி வந்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த  ராமச்சந்திரன் நேற்று முன்தினம் இரவு பைக்கில் நெற்குன்றம் செல்லியம்மன் கோயில் பகுதியில் உள்ள காலி மைதானத்துக்கு சுப்பிரமணியனை அழைத்து சென்று மது அருந்தினர். அப்போது, போதையில் கத்தியை எடுத்து சுப்பிரமணியனை சரமாரியாக தலை, கை, கால் ஆகிய பகுதிகளில்  வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினார். புகாரின்படி கோயம்பேடு போலீசார் ராமச்சந்திரனை கைது செய்தனர்.

Related Stories: