மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர், உறுப்பினர்களுக்கு 3 நாள் பயிற்சி பட்டறை

சென்னை: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேற்று மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான 3 நாள் பயிற்சிப் பட்டறையை சென்னை எழும்பூரில் துவக்கி வைத்தார். துறை செயலாளர் ஷம்பு கல்லோலிக்கர், சமூக பாதுகாப்புத் துறை இயக்குனர் வளர்மதி மற்றும் துறை உயர் அலுவலர்கள்  கலந்து கொண்டனர். இந்த பயிற்சி பட்டறையில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், ‘‘புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். புதிய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.  திறம்படவும், நேர்மையுடனும், அர்ப்பணிப்பு உணர்வோடும் செயல்பட வேண்டும்’’ என்றார்.

Related Stories: