சார் பதிவாளர் நியமனத்தில் இட ஒதுக்கீடு தடைகள் அகற்றப்பட்டதால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ் கேள்வி

சென்னை:  பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: சார்பதிவாளர் நியமன இடஒதுக்கீடு தடை நீக்கப்பட்ட பின்னரும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த அரசின் பதிவுத்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது. தீர்ப்பு வெளியாகி 70 நாட்களுக்கு மேலாகியும் அப்பட்டியலை வெளியிடாமல் பதிவுத்துறை தலைவர் தாமதித்து வருகிறார். பதிவுத்துறையில் கடந்த காலங்களில் செய்யப்பட்ட பணியாளர் நியமனங்களுக்கு முன்தேதியிட்டு இட ஒதுக்கீடு வழங்கி, அதனடிப்படையில் அனைத்து ஊழியர்களுக்கும் பணி மூப்புப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: