அதிமுக ஆட்சியில் உதய் மின் திட்டத்தால் கடன் ரூ.1,23,895 கோடியாக அதிகரிப்பு: நான்கரை ஆண்டுகளில் 52% கடன் சுமை; இந்திய தணிக்கை துறை அறிக்கையில் அம்பலம்

சென்னை: இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை அறிக்கையில் கூறியிருப்பதாவது: உதய் திட்டத்தின் பிரிவு 2.0ன் படி, டிஸ்காம் என்பது ஒருங்கிணைந்த மின் உற்பத்தி, பகிர்மான மற்றும் மின் தொடரமைப்பு நிறுனங்கள் அடங்கிய நிறுவனம். இத்திட்டத்தின் நோக்கம் டிஸ்காம்களின் கடன், வட்டி சுமையைக் குறைப்பதாகும். குறைந்த அளவு கடன்கள் மட்டுமே எடுத்துக் கொள்ள பரிசீலிக்கப்பட்டதால் ரூ.30,502 கோடி கடன் அளவுக்கு கடன் சுமையை டான்ஜெட்கோவிடம் தொடரவிடப்பட்டுள்ளது தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

நடந்துக் கொண்டிருக்கும் மின் உற்பத்தி நிலையங்கள், துணை மின் நிலைய பணிகள் மற்றும் பிற பகிர்மான பணிகள் தொடர்பான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள டான்ஜெட்கோ கூடுதல் நிதியை கடன் வாங்கியதால் ஒட்டுமொத்த கடன்கள் அதிகரித்தது. 2015 செப்டம்பர் 30ம்தேதி அன்று டான்ஜெட்கோவின் கடன்களின் நிலை ரூ.81,312 கோடியாகும். இது 2019-20ம் ஆண்டின் இறுதியில் மேலும் அதிகரித்து, நான்கரை ஆண்டுகளில் 52.37 சதவீதம் அதிகரித்து ரூ.1,23,895 கோடியாக இருந்தது. 2016ம் ஆண்டு மார்ச் இறுதியில் நிலுவையில் உள்ள கடன் தொகை ரூ.87,477 கோடி என்றும், இது 2020 மார்ச் இறுதியில் ரூ.1,23,895 கோடியாக அதிகரித்துள்ளது. இது 41.63 சதவீத அதிகரிப்பை குறிக்கிறது என்றும் தணிக்கையின் பகுப்பாய்வு சுட்டிக் காட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: