×

ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமரை நியமித்து புதிய அரசாங்கத்தை அமைப்பேன்; இன்றிரவு முதல் ஊரடங்கு கடுமையாக்கப்படும்: கோத்தபய அறிவிப்பு

இலங்கை: ஒரு  வாரத்திற்குள் புதிய பிரதமரை நியமித்து புதிய அரசாங்கத்தை அமைப்பேன் என்று  கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். அதிபரின் அதிகாரங்களை குறைத்து கொள்ள தயாராக இருப்பதாக கோத்தபய அறிவித்தார். இலங்கையில் இன்றிரவு முதல் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. வன்முறையிலோ அல்லது விதிகளில் குளுக்ககாக ஒன்றுகூட வேண்டாம் என இலங்கை காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தாலோ அல்லது  வன்முறையில் ஈடுபட்டால் அவர்களை சுட்டுத்தள்ள காவல்துறைக்கு  உத்தரவிடபட்டுள்ளது.

இலங்கையில் கலவரத்தில் ஈடுபடுவோரையும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்து வோரையும் சுட்டுத்தள்ள உத்தரவிட்டு முப்படைகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. நாடு முழுவதும்  ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது. தொடா்ந்து அசாதாரண சூழல் நிலவிவரும் நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இலங்கை ராணுவம் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது. இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக காலி முகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியேற அந்நாட்டு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.


Tags : Gothabaya , within one week new misters
× RELATED ரூ.53,000 கோடியாக உயர்ந்த வெளிநாட்டுக்...