இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக வெளியான தகவலுக்கு ராகுல் டிராவிட் மறுப்பு

டெல்லி: இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக வெளியான செய்திகளுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மறுப்பு தெரிவித்துள்ளார். இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் வரும் ஜனவரி மாதம் 8-ம் தேதியுடன் ஆட்சி முடிவுக்கு வரவுள்ளநிலையில், வருகிற நம்பவர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் மீண்டும் அங்கு ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியில் பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் தற்போதே தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் ஆளும் பாஜக கட்சி, கட்சியை பலப்படுத்தும் வகையில் பல்வேறு கூட்டங்களை கூட்டி பாஜக வருகிறது.

அதன் அடிப்படையில் பாஜக இளைஞர் அணி சார்பில் வரும் நாளை முதல் 15-ம் தேதி வரையில், 3 நாட்களுக்கு இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் யுவ மோர்ச்சா தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு நல்ல கருத்துகளை கூற உள்ளதாக தர்மசாலா சட்டப்பேரவை உறுப்பினர் விஷால் நெஹ்ரியா தெரிவித்தார். இந்நிலையில் பாஜக ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக வெளியான செய்திகளுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Related Stories: