பராமரிப்பு பணிக்கு வந்த சரக்கு ரயில் இன்ஜினில் தீ: குன்னூரில் பரபரப்பு

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் கடந்த சில நாட்களாக பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் நோக்கி ஜல்லி கற்களை ஏற்றிய சரக்கு மலை ரயில் அடர்ந்த வனப்பகுதியில் வழியாக சென்று கொண்டிருந்தது. மரப்பாலம் மலைப்பாதையில் சென்றபோது திடீரென ரயில் இன்ஜினில் தீப்பிடித்தது. உடனே ரயிலை நிறுத்தி 3 தீயணைப்பு கருவியால் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 3 ஓட்டுநர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சரக்கு மலை ரயில் இன்ஜின் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டு நின்றதால் அந்த வழியாக ஊட்டி மலை ரயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் சரக்கு மலை ரயில் ஹில்குரோவ் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுடது. இதைத்தொடர்ந்து மலை ரயில் இயக்கப்பட்டது. பின்னர் சரக்கு மலை ரயில் மீண்டும் குன்னூர் வராமல் மேட்டுப்பாளையம் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Related Stories: