ஆவடி அருகே கோவில் பதாகையில் சுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பசுமடம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு

ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில்பதாகையில் சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அரசு சார்பில் பசுமடம் அமைக்க இடம் தேர்வு செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை கோயிலுக்கு வந்தார். பின்னர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பசு மடம் அமைப்பதற்கான இடத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, சா.மு.நாசர் ஆகியோர் பார்வையிட்டனர். இதன்பிறகு அமைச்சர் சேகர்பாபு கூறும்போது, “சுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தில் ரூ.20 கோடி செலவில் பசுமடம் அமைக்கப்படும். பின்னர் இந்த பசு மடத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கு பக்தர்களால் வழங்கப்படும் மாடுகள் பராமரிக்கப்படும்’ என்றார்.

அப்போது, ஆவடி மேயர் உதயகுமார், மாநகராட்சி ஆணையர் சரஸ்வதி, திருவள்ளூர் மாவட்ட பிரதிநிதி சிங்காரம் உள்பட பலர் இருந்தனர். இதன்பிறகு அமைச்சர் சேகர்பாபு, திருமுல்லைவாயல் பச்சையம்மன் கோயில் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் குளம் சீரமைப்பு பணி மற்றும் புராதன காலத்து சிற்பங்களை பார்வையிட்டார். பின்னர் கோயிலுக்கு அடிப்படை வசதிகள் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Related Stories: