தூத்துக்குடி வல்லநாட்டில் கோவில் திருவிழாவை ஒட்டி மாட்டுவண்டி,குதிரைவண்டி பந்தயம்: பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டுகளிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் கோவில் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற மாட்டுவண்டி மற்றும் குதிரைவண்டி பந்தயத்தை பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு களித்தனர். வல்லநாடு தம்பிராட்டியம்மன் கோயில் சித்திரை திருவிழா 2 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சியாக நடைபெற்றது. இதையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரைவண்டி பந்தயங்கள் நடத்தப்பட்டன. 7 கி.மீ. தூரம் நடைபெற்ற பெரிய மாட்டுவண்டி போட்டியில் வல்லநாடு மாட்டுவண்டி முதலிடத்தை பிடித்தது.

இதேபோல் 6 கி.மீ. தூரம் நடைபெற்ற சிறிய மாட்டுவண்டி போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் மறுகால்குறிச்சியை சேர்ந்த மாட்டுவண்டி முதலிடத்தை பெற்றது. இதேபோன்று 10 கி.மீ. தூரம் நடைபெற்ற குதிரைவண்டி பந்தயத்தில் திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியை சேர்ந்த குதிரைவண்டி முதலிடத்தை பெற்றது. வெற்றிபெற்ற மாட்டுவண்டி மற்றும் குதிரைவண்டி உரிமையாளர்களுக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் வரை ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.      

Related Stories: