×

கோவையில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 12 டன் மாம்பழங்கள், 2 டன் சாத்துக்குடி பறிமுதல்!: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி..!!

கோவை: கோவையில்  ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 12 டன் மாம்பழங்கள் மற்றும் 2 டன் சாத்துக்குடி பழங்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. கோவை பெரியக்கடை வீதி, வைசியார் வீதி உள்ளிட்ட இடங்களில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் 6 குழுக்களாக சென்று அதிகாரிகள் ஆய்வு செய்ததில், 42 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் எத்திலீன் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 2 டன் சாத்துக்குடி பழங்களும் சிக்கியது. பறிமுதல் செய்யப்பட்ட பழங்கள் அனைத்தும் கிருமிநாசினி ஊற்றி அழிக்கப்பட்டன. இவற்றின் சந்தை மதிப்பு 8 லட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வின்  முடிவில் 12 கடைகளுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Coimbatore, Department of Chemicals, Mangoes, Food Security
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...