×

நான்கு பக்கம் மரணம் சூழ்ந்தபோதும் தாயகம் பிரியாத பிரபாகரன் எங்கே..ஊர் கொந்தளிக்க நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்சே எங்கே?: கவிஞர் வைரமுத்து சாடல்

சென்னை: இலங்கையில் வலுத்து வரும் மக்கள் போராட்டத்தால் நாட்டை விட்டு வெளியேற முயலும் அந்நாட்டு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை கவிஞர் வைரமுத்து கடுமையாக விமர்சித்துள்ளார். இலங்கையில் மீண்டும்  விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, மின் வெட்டு ஏற்பட்டு பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசை பதவி விலக வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  

பின்னர் அவர் குடும்பத்துடன் தலைமறைவானார். இதற்கிடையே, பிரதமர் ராஜபக்சே குடும்பத்துடன் இந்தியா தப்பிச்சென்றுவிட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் சில இலங்கை ஊடகங்களில் செய்தி பரவியது. இந்நிலையில், இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை கவிஞர் வைரமுத்து கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வைரமுத்து, தமிழில விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வீரத்தை பாராட்டி மகிழ்ந்த ராஜபக்சேவை சாடியுள்ளார். ட்விட்டர் பதிவானது பின்வருமாறு;

நான்கு பக்கம்
மரணம் சூழ்ந்தபோதும்
தாயகம் பிரியேன்
தாய்மண்ணில் மரிப்பேன் என்ற
பிரபாகரத் தமிழனின்
பேராண்மை எங்கே...

ஊர் கொந்தளித்த
ஒரே மாதத்தில்
நாடு கடக்கத் துடிக்கும்
ராஜபக்ச எங்கே...


சர்வதேச சமூகமே!
இப்போதேனும்
தமிழன் வீரத்திற்குத்
தலைவணங்கு


என்று கவிஞர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.


Tags : Prabakaran ,Rajapakse ,Poet Vairamuthu Sadal , Ur turmoil, country, Rajapaksa, poet Vairamuthu
× RELATED இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார...