2 ஆண்டாக வழக்கத்துக்கு மாறான மாற்றம் பெருமூளை கட்டியுடன் சீன அதிபர் அவதி?: பாரம்பரிய சிகிச்சை எடுப்பதாக தகவல்

பீஜிங்: கடந்த 2 ஆண்டாக பெருமூளை கட்டியுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் அவதிப்பட்டு வருவதாகவும், அவர் சீன பாரம்பரிய சிகிச்சை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா நோய் சீனாவில் இருந்து பரவியதாக கூறப்பட்ட நாள் முதல் சீன அதிபரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான ஜி ஜின்பிங் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அவரது உடல்நிலை பாதிப்பு குறித்து முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு பெருமூளை கட்டி (அனீரிசம்) என்ற நோய் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்தாண்டின் இறுதியில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. இருப்பினும், ரத்த நாளங்களை மென்மையாக்குவதற்கும், அனீரிசம் பாதிப்புக்கு தீர்வாக அறுவை சிகிச்சை செய்வதை விட சீன பாரம்பரிய மருத்துவத்தின்படி சிகிச்சை எடுத்து வருகிறார்.

முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம், இத்தாலிக்குச் சென்ற ஜி ஜின்பிங், ​​​​ நடையானது வழக்கத்திற்கு மாறானதாகவும், கொஞ்சம் சாய்ந்தவாறு நடந்தார். அதன்பிறகு அவர் பிரான்ஸ் சென்றடைந்தபோது, ​​அவர் உட்காருவதற்கு மற்றொருவரின் ஆதரவு தேவைப்பட்டது. கடந்தாண்டு அக்டோபரில் ஷென்சென் நகரில் நடந்த பொதுக் கூட்டத்திற்​கு அவர் குறிபிட்ட நேரத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. அன்றைய உரையில் தெளிவற்ற முறையில் பேசினார். அடிக்கடி இருமினார். அப்போதிருந்தே  அவரது உடல்நிலை சரியில்லை என்ற ஊகங்கள் கிளம்பின. கொரோனாவால் மீண்டும் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் சீனா, தற்போது பொருளாதார பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மருத்துவ செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில், ‘மூளை ரத்த நாளங்களின் சுவர்கள் பலவீனமடைவதால், மூளை அனியூரிசிம்ஸ் அல்லது இன்ட்ராக்ரானியல் அனீரிசம் என்றும் அழைக்கப்படும் பெருமூளை அனீரிசம் ஏற்படும். அந்த ரத்த நாளங்கள் விரிவடைந்து வெடித்தால், மூளையில் ரத்தக்கசிவு அல்லது பக்கவாதம் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். மருத்துவ அறிவியலின்படி, இதனை சப்அரக்னாய்டு ஹெமரேஜ் என்று அழைக்கின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: