×

ராடுகானுவை வீழ்த்திய பியான்கா ஆண்ட்ரெஸ்கு

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், 10ம் நிலை வீராங்கனையான இங்கிலாந்தின் எம்மா ராடுகானு (19), கனடாவின் பியான்கா ஆண்ட்ரெஸ்குவுடன் (21) மோதினார். இதில் பியான்கா 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் துனிசியாவின் ஓனஸ் ஜபீர் 6-0,7-6 என ருமேனியாவின சொரனா கிறிஸ்டியாவை வென்றார். ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச்  6-3,6-2 என ரஷ்யாவின் அஸ்லான் கரட்சேவ்வை வீழ்த்தினார்.


Tags : Bianca Andrescu ,Radokanu , Radukanu, Fallen, Bianca Andres
× RELATED ராடுகானுவை வீழ்த்திய பியான்கா ஆண்ட்ரெஸ்கு