ஜனவரி முதல் ஏப்ரல் வரை ‘ஆல்கஹால்’ சோதனையில் சிக்கிய 9 விமானிகள்: போதையில் இருந்த 2 பேர் சஸ்பெண்ட்

புதுடெல்லி: ஜனவரி முதல் ஏப்ரல் வரை நடத்தப்பட்ட ‘ஆல்கஹால்’ சோதனையில் 9 விமானிகள் சிக்கினர். இவர்களில் போதையில் இருந்த 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்திய விமான ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘இண்டிகோ விமான நிறுவனத்தின் நான்கு விமானிகள் மற்றும் 10 கேபின்-குழு பணியாளர்கள், கோ-பர்ஸ்ட் விமான நிறுவனத்தின் ஒரு பைலட் மற்றும் ஐந்து கேபின் குழு பணியாளர்கள், ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் ஒரு பைலட் மற்றும் 6 கேபின் குழு பணியாளர்கள், ஏர்-இந்தியா எஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் ஒரு பைலட் மற்றும் ஆறு கேபின் குழு பணியாளர்கள், விஸ்தாரா நிறுவனத்தின் ஒரு பைலட் மற்றும் இரண்டு கேபின் குழு பணியாளர்கள்,  அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் ஒரு பைலட் மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தின் 5  கேபின் குழு பணியாளர்கள் என ஒன்பது விமானிகள் மற்றும் 30 கேபின் - குழு பணியாளர்கள் தங்களது விமானப் பணிக்கு முந்தைய ஆல்கஹால் சோதனைகளில், சரக்கு அடித்திருந்தது தெரியவந்துள்ளது.

இந்த சோதனை முடிவானது கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதிக்குள் எடுக்கப்பட்ட தணிக்கை முடிவாகும். இவ்விவகாரம் தொடர்பாக 41 பணியாளர்கள் (ஒன்பது விமானிகள் மற்றும் 32 கேபின் குழு பணியாளர்கள்ள்) மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு கேபின் குழு பணியாளர்கள், இரண்டாவது முறையாக பணிக்கு முந்தைய சோதனையில் சரக்கு அடித்திருந்தது தெரியவந்ததால், அவர்களை 3 ஆண்டுகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: