சேரங்கோடு பகுதியில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை மிரட்டும் மக்னா யானை-கும்கி வரவழைத்து விரட்ட கோரிக்கை

பந்தலூர் :  பந்தலூர் அருகே சேரங்கோடு பகுதியில் பொதுமக்களை ஆக்ரோசமாக துரத்தும் மக்னா யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பந்தலூர் அருகே சேரங்கோடு மற்றும் சேரம்பாடி டேன்டீ பகுதியில் 10க்கும் மேற்பட்ட யானைகள் தேயிலைத்தோட்டம் பகுதியில் சுற்றித்திரிகிறது. இதனால் தோட்டத்தொழிலளார்கள் அச்சத்தில் உள்ளனர்.இந்நிலையில் சேரங்கோடு பகுதியில் ஒரு மக்னா யானையும் குடியிருப்பு மற்றும் தேயிலைத்தோட்டம் பகுதியில் மிகவும் ஆக்ரோஷத்துடன் பொதுமக்களை விரட்டுகிறது. இதனால் மக்கள் மேலும்  அதிர்ச்சியடைந்துள்ளனர்.  

 நேற்று மாலை மக்னா யானை அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை விரட்டியது. இதனால் அவர்கள்  அலறி அடித்து ஓடி உயிர் தப்பியுள்ளனர். ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரியும் மக்னா யானையால் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது கும்கி யானை வரவழைத்து மக்னா யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: