×

தமிழகத்தில் மே 15ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 15ம் தேதி வரை 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அசானி புயல் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் பரவலாக லேசான மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனிடையே புயலின் தன்மை வலுவிழந்து ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டணம் அருகே மத்திய, மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இது வட கிழக்கு திசையில் வட ஆந்திர கடலோர பகுதியில் தொடர்ந்து நகர்ந்து வருகிறது. இந்நிலையில் அசானி புயல் எதிரொலியாக தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகம், புதுச்சேரியில் 15ம் தேதி வரை 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அசானி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும்.வட தமிழ்நாடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக தேக்கடி, பள்ளிப்பட்டு, திருப்பூரில் தலா 5 செ.மீ.மழை பதிவானது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென் மேற்கு வங்கக்கடல் பகுதி, தமிழ்நாட்டின் கடலோரத்தில் பலத்த சூறாவளி வீசும். மே 12,13ல் மேற்கு வங்கம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் தென் மேற்கு வங்கக்கடல், பகுதியில் பலத்த  காற்று வீசக்கூடும். மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Center , Chance of moderate rain in Tamil Nadu till May 15: Chennai Meteorological Center Information ..!
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...