தாளவாடியில் நீரை சேமிக்க கூடுதல் தடுப்பணைகள் கட்ட தமிழக அரசிற்கு விவசாயிகள் கோரிக்‍கை

ஈரோடு: தாளவாடியில் தொடர் கனமழையால் 20-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில், கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டினாலும், மாலை நேரத்தில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணி முதல் 11 மணி வரை தலமலை, கோடிபுரம், நெய்தாளபுரம், ஓசூர், சிக்கள்ளி, பணக்கள்ளி, கெட்டவாடி, ஆசனூர், குளியாடா ஆகிய பகுதியில் பலத்த மழை பெய்தது. வனப்பகுதியிலும் பலத்த மழை பெய்ததால், அங்குள்ள குளம், குட்டைகள் நிரம்பி உள்ளது.

பலத்த மழையால் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி நின்றது. தாளவாடி, திய்யனாரை மற்றும் சூசைபுரம் அருகே உள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்மழையால் 20-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது. மழைநீர் அனைத்தும் வீணாக கர்நாடக மாநிலம் சிக்கொலா அணைக்கு செல்கிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கூடுதல் தடுப்பணைகள் கட்டி, மழைநீரை சேமிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: