×

இலங்கையில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த படைகளை அனுப்ப மாட்டோம்: இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் விளக்கம்..!

கொழும்பு: இலங்கைக்கு படைகளை அனுப்ப மாட்டோம் என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இலங்கை அரசியல் தலைவர்கள் 35 பேரின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷேவின் வீடும் எரிக்கப்பட்டது. இலங்கையில் அரசுக்கு எதிரான பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் கலவரமாக வெடித்தது.

ஏரளாமான வாகனங்கள், பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனிடையே இலங்கையில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த இந்தியா படைகளை அனுப்ப உள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. அதில்; இலங்கைக்கு இந்திய படைகளை அனுப்பவதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை உயர் ஆணையரகம் திட்டவட்டமாக மறுக்கிறது.

இந்த கருத்துகள் இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஏற்றதாக இல்லை. இலங்கையின் ஜனநாயகம் மற்றும் பொருளாதார மீட்டெடுப்புக்கு இந்தியா முழு உறுதுணையாக இருக்கும். இலங்கைக்கு படைகளை அனுப்ப மாட்டோம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Tags : Sri Lanka ,Indian , We will not send troops to control violence in Sri Lanka: Indian Embassy in Sri Lanka Explanation ..!
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...