முதுமலை புலிகள் காப்பக உள் மண்டலத்தில் பருவமழைக்கு முந்தைய கணக்கெடுப்பு பணி தொடங்கியது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவமழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது. 16ம் தேதி வரை நடக்கிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு புலி, யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் பருவமழைக்கு முன்பும், பருவமழைக்கு பின்னரும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் அடுத்த மாதம் தென்மேற்கு பருவமழையானது துவங்கவுள்ள நிலையில்,

முதுமலை புலிகள் காப்பகத்தில் 321 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட உள் மண்டலத்தில் உள்ள கார்குடி, நெலக்கோட்டை, தெப்பகாடு, மசினகுடி, முதுமலை உள்ளிட்ட வனச்சரகங்களில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளது. வரும் 16ம் தேதி வரை நடக்கிறது. இக்கணக்கெடுப்பு பணியின் போது நேரடி மற்றும் மறைமுக தடயங்கள் மூலம் ஊன் உன்னிகளின் வாழ்விட பயன்பாடு, நேர்கோட்டு பாதையில் தாவர உன்னிகள் கணக்கெடுப்பு, தாவர உன்னிகளின் வாழ்விட வகை மதிப்பீடு செய்தல் மற்றும் பிணந்தின்னி கழுகுகளின் எண்ணிக்கை போன்றவை குறித்தும் கணக்கெடுக்கப்பட உள்ளது.

Related Stories: