கடலூர் மாவட்டம் பெரியகுப்பத்தில் போலீசார் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு: நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் இல்லை

கடலூர்: கடலூர் மாவட்டம் பெரியகுப்பத்தில் போலீசார் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில் அமைந்துள்ளது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம். தற்போது இது செயல்படாமல் உள்ளது. கடந்த தானே புயலால் இந்த சுத்திகரிப்பு நிலையம் பாதிக்கப்பட்டதால் ஆலையின் பயன்பாட்டுக்கான இரும்பு உள்ளிட்ட தளவாட பொருட்கள் ஆலை வளாகத்தில் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்குள்ள இரும்பு பொருட்களை கொள்ளையடிக்க அடிக்கடி கொள்ளையர்கள் புகுந்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று அதிகாலை கொள்ளை சம்பவம் குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர்.

அப்போது சுமார் 50 கொள்ளையர்கள் 6 போலீசார் மற்றும் தொழிற்சாலை காவலர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் 3 பெட்ரோல் குண்டுகள் வெடித்த நிலையில் அதிஷ்டாவசமாக போலீசார் தப்பினர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் இந்த கும்பல் கடந்த சில நாட்களாக ஆலைக்குள் புகுந்து இரும்பு பொருட்களை திருடி வந்ததாகவும், இதுவரை 1,500 டன்னுக்கு மேல் இரும்பு பொருட்களை திருடி உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: