×

அசானி புயலால் சென்னையில் 12 விமானங்கள் ரத்து

சென்னை: அசானி புயல் எச்சரிக்கை காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்படும் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தை அச்சுறுத்தும் ‘அசானி’ புயல் காரணமாக சென்னையில் இருந்து நேற்று காலை 7 மணிக்கும் காலை 10.40 மணிக்கும் விசாகப்பட்டினம் செல்லும் 2 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுபோல் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை 10.40 மணிக்கும் பகல் 1.45 மணிக்கும் வரவேண்டிய 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து ஐதராபாத், ஜெய்ப்பூர், மும்பை ஆகிய இடங்களுக்கு செல்லும் 3 விமானங்கள், ஐதராபாத், ஜெய்ப்பூர், மும்பை ஆகிய இடங்களில் இருந்து சென்னை வரும் 3 விமானங்களை ரத்து செய்யப்படுவதாக ஏர்ஏசியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. அசானி புயல் காரணமாக நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து 6 விசாகப்பட்டிணம், ஐதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags : Chennai ,Asani , 12 flights canceled in Chennai due to Asani storm
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...