கொடநாடு கொலை வழக்கு சயானிடம் 2வது நாளாக விசாரணை

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த வழக்கில் கைதான சயானிடம் விசாரணை நடந்தது. இந்த நிலையில் நேற்று 2வது நாளாக அவரிடம் விசாரணை தொடர்ந்தது. விசாரணையின்போது சயான் மேலும் சில நபர்களின் பெயர்களை கூறியுள்ளதாக தெரிகிறது. அவர்களுக்கு சில முக்கிய விஷயங்கள் தெரியும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மேலும் சில நபர்களை விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: